
ஜெர்மனியில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிறுவனுக்கு பதிலாக ரோபோ ஒன்று பள்ளிக்குச் சென்று பாடம் படிக்கின்றது. ஜெர்மனியில் நுரையீரல் பாதிப்பால் linus என்ற சிறுவனால் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அவனால் மெதுவாக நடக்க முடிந்தாலும் படி ஏறவோ அல்லது ஓடவோ முடியாது. இதனால் அவன் வீட்டிலிருந்து படிக்கும் என ஏற்பட்டது. அவனுக்கு உதவுவதற்காக ஒரு ரோபோ உருவாக்கப்பட்ட நிலையில் பள்ளியில் அவனது இடத்தில் அந்த ரோபோ அமர்ந்திருக்கும். ஆசிரியர் பாடம் எடுப்பதை அந்த சிறுவன் வீட்டில் இருந்தபடி தனது கணினி மூலமாக கவனித்துக் கொண்டிருப்பான்.
அவனுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் அவன் ஒரு பொத்தானை அழுத்தினால் அந்த ரோபோவில் லைட் எரியும். அதை வைத்து அவன் ஏதோ கேட்க விரும்புகிறான் என்பதை அறிந்து கொள்ளும் ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் பேசுவது போல அந்த ரோபோவிடம் வந்து பேசுவார். இதன் மூலம் அந்த சிறுவனுக்கு தான் பள்ளியிலிருந்து படிப்பது போன்ற உணர்வு ஏற்படும். அது மட்டுமல்லாமல் சிறுவனின் நண்பர்கள் சாப்பிட சென்றாலும் அந்த ரோபோவை தூக்கிக் கொண்டே செல்வதால் அவனுக்கு தன் நண்பர்களுடன் இருக்கும் உணர்வும் ஏற்படுவதால் அவன் பள்ளியையும் நண்பர்களையும் மிஸ் பண்ண வில்லை. இந்த சிறுவனைப் போலவே ரோபோ உதவியுடன் கல்வி கற்கும் ஒரு மாணவனை காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.