
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தேசிய சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கும், மிமி படத்திற்காக நடிகை கிருத்தி சனோனுக்கும் விருதுகள் கிடைத்துள்ளது. டெல்லியில் நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில், விருது அறிவிக்கப்பட்ட அனைத்து திரையுலக நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர்.
இதில், கிருத்தி சனோனும், அல்லுவும் எடுத்துக்கொண்ட செல்ஃபி வைரலாகி வருகிறது. இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.