இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.அந்த வகையில் தற்போது குழந்தைகளின் பூரிப்பூட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விடுமுறை தினங்களில் பொதுவாக நம்முடைய குழந்தைகள் விளையாடுவது, டிவி பார்ப்பது,செல்போன் பார்ப்பது போன்றவைகளின் மூலம் நேரத்தை களிப்பார்கள்.

ஆனால் சீன நாட்டில் உள்ள குழந்தைகள் தங்களது பெற்றோர்களுக்கு விடுமுறை தினங்களில் உதவி செய்கிறார்கள். அந்த வகையில் சிறு குழந்தைகள் பெற்றோர்களுடன் சேர்ந்து வீடு கட்டும் பணி செய்கின்றனர். அதில் அழகாக சிமெண்ட் எடுத்து வீடுகளில் பூசுகின்றனர். இது பார்க்க புதிதாக செய்வது போன்று இல்லாமல் நன்கு பழக்கமாகி ஸ்டைலாக செய்வதுபோல் இருக்கிறது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் அனைவரும்  குழந்தைகளுக்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.