
நாடு முழுவதும் தக்காளி விலை ஆனது நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம்பொழுது தற்போது ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதனால் பெரிய உணவகங்களில் கூட தக்காளி பயன்படுத்த உரிமையாளர்கள் யோசித்து வரும் நிலையில் சாமானிய மக்கள் இன்னும் பரிதாபத்தில் உள்ளார்கள். ஒரு சில இடங்களில் தக்காளி விலையேற்றத்தால் திருட்டு சம்பவங்களும் அஹிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடையில் உள்ள தக்காளிகளை பாதுகாக்க 2 பாதுகாவலர்களை நியமித்த வியாபாரியின் செயல் உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து வியாபாரி அஜய் கூறியதாவது, ‘தக்காளி விலை அதிகரித்துள்ளதால் கடைக்கு வருபவர்கள் வன்முறையில் ஈடுபடுவது, திருடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களிடம் இருந்து தக்காளியை பாதுகாக்கவே பாதுகாவலர்களை நியமித்துள்ளேன்’ என்றார்