
தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரியில் நடிகர் விஜய் தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநாடு கடந்த 27ஆம் தேதி பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில் லட்சக்கணக்கானோர் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட விஜய் பாஜகவை மறைமுகமாக விமர்சித்ததோடு திமுகவை நேரடியாக அரசியல் எதிரி என்று அறிவித்தார். நடிகர் விஜய் தன்னுடைய கொள்கைகள் மற்றும் கட்சி பெயர் விளக்கம், கொடி விளக்கம் போன்றவைகளையும் பாடல் மூலம் மக்களுக்கு தெளிவு படுத்தினார். இந்நிலையில் நடிகர் விஜய் வருகிற சட்டமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிடுவார் என்று ஏற்கனவே அந்த கட்சியை சேர்ந்தவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர்.
இந்நிலையில் தற்போது ரசிகர்கள் instagram பக்கத்தில் எம்.எஸ் தோனி சேப்பாக்கம் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேட்பாளராக களமிறங்குவார் என்ற மீம்சை வைரலாக்கி வருகிறார்கள். மேலும் ஏற்கனவே தோனி மற்றும் விஜய் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது தோனியை சேப்பாக்கம் தொகுதியில் வேட்பாளராக களம் இறக்குவோம் என்று கூறி மீம்ஸ் வெளியிட்டுள்ள நிலையில், அந்த தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக திமுக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் சேப்பாக்கம் தொகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நிலையில் சென்னை சேப்பாக்கத்திற்கு தான் தோனி அடிக்கடி வருவார். இதை மனதில் வைத்து தான் ரசிகர்கள் சேப்பாக்கத்தில் உதயநிதிக்கு எதிராக தோனி களம் இறங்கினால் எப்படி இருக்கும் என்ற நோக்கத்தில் நகைச்சுவையாக இந்த மீம்சை வைரலாக்கி வருகிறார்கள்.
View this post on Instagram