பாம்புகளே இல்லாத நாடு ஒரு இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நியூசிலாந்து தீவில் பாம்புகளே கிடையாதாம். இந்த தீவில் சுமார் 85 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக கோண்டுவானா கண்டத்தில் இருந்து பிரிந்தது.

இந்த நாட்டை சுற்றி இருக்கும் பல பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன. ஆனால் அந்த பாம்புகளால் கடலில் நீந்தி நியூசிலாந்து நாட்டை அடைய முடியவில்லை. மேலும் வெளிநாடுகளிலிருந்து  யாரும் பாம்புகளை நியூசிலாந்திற்கு கொண்டு வர முடியாதபடியான சட்டங்களும் இருக்கிறது. இங்கு இருக்கும் உயிரியல் பூங்காவில் ஒரு பாம்பு கூட காணப்படாது.