பொதுவாக முட்டை என்பது நீள் வட்ட வடிவில் தான் இருக்கும். அதாவது பொதுவாக முட்டை OVAL வடிவில் இருக்கும் நிலையில் வட்ட வடிவிலான முட்டையை பார்ப்பது மிகவும் அரிது. இந்த வட்ட வடிவிலான முட்டையை பொதுவாக யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பெண்ணுக்கு வட்ட வடிவிலான முட்டை கிடைத்துள்ளது. இது கோழி முட்டை தான். இந்த முட்டையை அந்த பெண்மணி ED Pownall என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இதனை அவர் Luventas Foundation-க்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும் இந்த முட்டை தற்போது 2152 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.