நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன்தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்  இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த  படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியது.

கடந்த 28ஆம் தேதி படத்தின் டீசர் வெளியானது. இதனை தொடர்ந்து இந்த மாதத்தின் இறுதியில் படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. மேலும் புக்கிங் இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார் என்று கூறப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.