
தற்போது ஒரு சுவாரசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு செம்மறி ஆட்டின் செயலைப் பார்த்தால் இணையவாசிகளால் தங்கள் சிரிப்பை அடக்க முடியாது. அதில், வீட்டின் பளபளப்பான கதவில் செம்மறி ஆடு தன் பிம்பத்தை பார்ப்பதை காண முடிகிறது. தன் பிம்பத்தினை பார்த்த அந்த ஆடு, அது வேறு ஆடு என நினைத்துக்கொள்கிறது.
அதனை எதிர்கொள்ள அது சில அடிகள் பின்வாங்கி விரைவில் கதவைத் தாக்குகிறது. எனினும் அதற்கு ஒன்றும் புரியவில்லை. தன்னால் ஏன் அந்த ஆட்டை தாக்க இயலவில்லை என யோசிக்கிறது. அதன்பின் அது மீண்டும் தாக்குதலுக்கு தயாராகி தாக்கிக்கொண்டே இருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram