
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோக்கள் தினந்தோறும் இணையத்தில் பரப்பப்படுகிறது. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இப்படி வெளியாகும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும்.
அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு நாய் மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்துள்ளது. தினம்தோறும் ரயிலில் பயணிக்கும் பயணியைப் போலவே அது படு கூலாக பயணிக்கின்றது. ரயிலில் பயணிக்கும் நாய் ரயில் நிலையம் வருவதை கண்டு இறங்க தயாராகின்றது. அதாவது ரயில் நிலையம் வந்து ரயில் நிற்பதற்கு முன்னரே அந்த நாய் ரன்னிங்கில் இறங்கியுள்ளது. ரயிலில் இருபுறமும் சென்று வெளிப்புற காட்சிகளை வேடிக்கை பார்த்து மகிழ்ச்சியாக வந்த நாய் ரயில் நிலையம் வந்தவுடன் ரன்னிங் இல் இறங்கிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
A pro -Mumbai- Lad- local train commuter – 😍 pic.twitter.com/J750FnqD0M
— Mother Earth (@yashonearth) July 26, 2023