ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் ஒரு குடும்பத்தினர் வீட்டில் சேர்ந்து கிடந்த துணிகளை துவைப்பதற்காக வாஷிங் மெஷினுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வாஷிங்மெஷினிற்குள் ஐந்து அடி நீள பாம்பு ஒன்று சுருண்டு கிடந்துள்ளது.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் காணொளியாக பதிவு செய்ததோடு அக்கம் பக்கத்தினருக்கும் எச்சரிக்கை கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த பாம்பை மீட்டு அடர்ந்த காட்டுப்பகுதியில் விட்டுள்ளனர். இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.