
இந்தியாவைச் சேர்ந்த பேட்மிண்டன் ஒலிம்பிக் வீராங்கனை பிவி சிந்து. இவருக்கு சமீபத்தில் வெங்கட தட்சாய் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இருவருக்கும் ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக நடிகர் சிரஞ்சீவி, நடிகை ரோஜா, நடிகை மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் நடிகர் அஜித்தின் தன் மனைவி ஷாலினி மற்றும் மகன் மகள் ஆகியோருடன் கலந்து கொண்டுள்ளார். பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அஜித் அவ்வளவாக கலந்து கொள்ள மாட்டார். அவரை பொது நிகழ்ச்சிகள் மற்றும் இது போன்று திருமண நிகழ்ச்சிகளில் பார்ப்பது மிகவும் அரியது. மேலும் அப்படி இருக்கையில் பி.வி சிந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குடும்பத்துடன் கலந்து கொண்டது கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.