
தமிழ் திரையரங்குகளில் இன்று வெளியாக போகும் வாழை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை கோலிவுட் சினிமாவில் சிறந்த இயக்குனராக கொடிகட்டி பறப்பவர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் கர்ணன் என்ற படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், சதீஷ்குமார்ஜே, ஜானகி திவ்யா, துரைசாமி போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் மாரி செல்வராஜை பாராட்டி வருகிறார்கள். அப்போது படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்து நெகிழ்ந்து போன இயக்குனர் பாலா திரையரங்கை விட்டு வெளியே வந்த போது இயக்குனர் மாரிமுத்து செல்வராஜை கட்டியணைத்து அவரது கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.
இவர் செய்த இந்த காரியம் அந்த இடத்தில் இருந்து அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனை வீடியோவாக பதிவு செய்து மாரி செல்வராஜ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட ரசிகர்கள் எப்பவும் “பாலா படத்தை பார்த்து தான் ஆடியன்ஸ் அழுவாங்க, இப்போ அவரையே வாழை படம் அழ வெச்சி இருக்கு” என்று தங்கள் கருத்தை தெரிவித்தனர். மேலும் பாலாவிடம் இருந்து இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கவில்லை கண்டிப்பாக வாழைப்பழத்தை பார்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.