சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்து வரு கின்றது. பேட்டிங். பவுலிங். பீல்டிங் என அனைத்தையுமே சொதப்பி வருகிறது. குறிப்பாக ஓபனிங் மற்றும் மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆடக்கூடிய வீரர் இல்லாமலே தவித்து வருகிறது. மற்ற அணிகளில் இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து  சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அப்படி எந்த ஒரு வீரருக்கும் இந்த வருடம் இன்னும் வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் சென்னை அணியில் சுமாரான மிடில் ஆர்டரில் ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் இதற்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது. அதாவது சென்னை அணி மும்பையை சேர்ந்த 17 வயது  ஆயுஷ் மாஹட்ரேவைசோதனைக்கு அழைத்துள்ளது. ஒருவேளைஇவரை  அணியில் எடுக்க விரும்பினால் ஒரு காயப்பட்ட வீரருக்கு மாற்றாக தான் எடுக்க முடியு.ம் நேரடியாக அணியில் எடுப்பது சாத்தியம் கிடையாது. இது குறித்து பேசி உள்ள காசி விஸ்வநாதன், “சோதனையில் ஆயுஷ் மஹாட்ரே  சிறப்பாக செயல்பட்டு எங்களை ஈர்த்திருக்கிறார். ஆனால் இப்போதைக்கு அணியில் எந்த வீரருக்கும் காயம் இல்லை. தேவைப்பட்டால் மாற்றுவீரர்களை தேர்வு செய்வோம் என்று கூறியுள்ளார்.  இந்த இளம் வீரர் விஜய் ஹசாரே தொடரில் இரண்டு சதங்கள் ,ஒரு அரை சதம் என 458 ரன்களும், ரஞ்சி தொடரில் 421 ரன்களும் குவித்து சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்.