
தென்காசி மாவட்டத்தில் உள்ள கருப்பா நதி அணை 72 அடி கொள்ளளவு உடையது. இந்நிலையில் கனமழை காரணமாக கருப்பா நதி அணை முழு கொள்ளளவை வெட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனையடுத்து உபரி நீர் பெரியாற்றில் கலந்து கடையநல்லூர் பகுதியில் அமைந்திருக்கும் பாப்பான் கால்வாய் வழியாக செல்கிறது.
அந்த கால்வாய் கரையில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் உபரி நீர் கரை புரண்டு வெள்ளமாக ஓடுகிறது. இதனால் அம்பேத்கர் தெருவில் இரண்டு வீடுகள் சேதம் அடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.