ஈரோடு மாவட்டம் ஆர்.என் புதூர் பகுதியில் ‌ சதாசிவம் (44)-சரிதா (37) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக சரிதாவின் அண்ணனுக்கும் சதாசிவத்திற்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தன் மனைவியிடம் சதாசிவம் இனி அவருடைய அண்ணனிடம் பேசக்கூடாது எனக் கூறியுள்ளார். அதன்படி சரிதாவும் தன் அண்ணனான சிவனேசனுடன் பேசாமல் இருந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சரிதா தன் அண்ணனுடன் செல்போனில் பேசிய நிலையில் சிவனேசன் உறவினர்கள் சிலருடன் சதாசிவம் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர்கள் அங்கு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கடந்த 25ஆம் தேதி சரிதா தன் அண்ணனுக்கு தொடர்பு கொண்டு தன் கணவர் தன்னிடம் தகராறு செய்வதாக கூறியுள்ளார். அதன் பிறகு சரிதா வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது குறித்து சிவனேசன் தன் தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.