கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் பகுதியில் கூலி தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 21 வயதில் மகன் இருக்கிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளி 2-வது திருமணம் செய்து கொண்டார். 2-வது மனைவிக்கு 5 வயதில் மகள் இருக்கிறார். கடந்த 2- ஆம் தேதி சிறுமி வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த முதல் மனைவியின் 21 வயது மகன் தங்கை உறவுமுறை உள்ள சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.