தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் ஒட்டியப்பள்ளி என்ற கிராமத்தில் கோடை வெயிலை சமாளிப்பதற்கு திருப்பதி (19), மகேஷ் (19), நரேஷ் (18), சைதேஜா (19), வினோத் (18) ஆகிய ஐந்து இளைஞர்கள் குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளனர்.

அப்போது திருப்பதி, மகேஷ் மற்றும் நரேஷ் ஆகிய மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். வினோத்தும் நேரில் மூழ்கிய நிலையில் அவரை சைதேஜா கஷ்டப்பட்டு கரைக்கு கொண்டு வந்தார். உயிரிழந்த மூவரும் உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் ஆவார். மூன்று மகன்களையும் ஒரே நேரத்தில் பறி கொடுத்த பெற்றோர் மனம் உடைந்து உள்ளனர்.