
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கின் FIR பொது வெளியில் வெளியானதற்கு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் சி.சி.டி.என்.எஸ் அமைப்பிலிருந்த தொழில்நுட்ப குறைபாடுகளே காரணம். காவல்துறை காரணம் அல்ல.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டவாறு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு இது தொடர்பான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த வழக்கு பற்றிய சென்னை காவல்துறை ஆணையரின் பேட்டி பற்றி தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை பொருத்தவரை அகில இந்திய பணிகள் விதிகள் 1968-ன் படி கடைபிடிக்கப்படும் நடைமுறைகளில் அடிப்படையில் எந்த தவறும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.