தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. தற்போது அமரன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் இமான், இனி சிவகார்த்திகேயனோடு இந்த ஜென்மத்தில். இணைந்து பணியாற்ற மாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார் என்னுடைய குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அதை வெளியில் சொல்லாமல் இருக்கிறேன். அந்த துரோகம் குறித்து அவரிடம் நானே நேராக கேட்டுவிட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. ஆனால் இது குறித்து சிவகார்த்திகேயன் வாய் திறக்காமல் இருந்தார். இந்த நிலையில் இமானிடம் சிவகார்த்திகேயன் மன்னிப்பு கேட்ட பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், நான் ஒருவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் அது இமான் அண்ணாவிடம் தான். ஏனெனில் நான் கொஞ்சம் படங்களில் பிஸியாக இருக்கிறேன். அதனால் அவரை பார்க்க முடியாமல் பேச முடியாமல் இருக்கிறது.

நாங்கள் இரவு குடும்பமாக ஒன்றாக சாப்பிட போவோம் . இப்போது அது நடப்பதில்லை. நாங்கள் அவ்வாறு செல்லாதது இமான் அண்ணாவுக்கு அப்செட் ஆகிடுச்சு. நான் அவரை அண்ணன் என்று தான் கூப்பிடுவேன். அவரும் என்னை தம்பி என்று தான் கூப்பிடுவார்.  எந்த ஒரு ஈகோவும் எங்களுக்குள் இருக்காது. அதேபோல் அவர் மீது எப்போதும் எனக்கு அண்ணன் என்ற ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் ஏதாவது ஒரு பாடலில் திருத்தம் சொன்னால் கூட நான் பயந்து கொண்டே தான் அவரிடம் செல்வேன் என்று கூறியுள்ளார்.