திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் லட்சுமணன் (44) என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணம் ஆகி சங்கீதா என்ற மனைவியும் 2 மகன்கள் மற்றும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் லட்சுமணனுக்கு சுரேஷ் (40) என்ற தம்பி இருக்கிறார். இவர் சங்கீதாவின் தங்கை மணிமேகலையை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதன் காரணமாக சங்கீதா மற்றும் சுரேஷ் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் சம்பவ நாளில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுரேஷ் சங்கீதா வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் சங்கீதாவை அரிவாளால் சுரேஷ் வெட்டி கொலை செய்தார். இதில் சங்கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சுரேஷ் தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சங்கீதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் சுரேஷை வலைவீசி தேடி வருகிறார்கள்.