
கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. தற்போதைக்கு 53 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அம்மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இரண்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குரங்கு காய்ச்சலின் தீவிரம் கருவி தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் நோய் பரவலை தடுக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொற்றுக்குள்ளான உண்ணிகளால் கடிக்கப்பட்ட குரங்குகளில் இருந்து இந்த தொற்று மனிதனுக்கு பரவி பல பாதிப்புகளை ஏற்படுகிறது.
அதாவது காய்ச்சல், உடல் வலி, தலைவலி, வாந்தி, ஜீரணக் கோளாறு, ரத்தப்போக்கு போன்றவை குரங்கு காய்ச்சல் அறிகுறிகள். எனவே சாதாரண தலைவலி, காய்ச்சல, உடல் வலி என்றாலும் உடனடியாக அதற்கான பரிசோதனை செய்து கொள்ளும்படி சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பூச்சி கடிகள் எதுவும் ஏற்படாத வண்ணம் முழுமையான ஆடைகளை அணியும்படியும், தமிழக எல்லையோர பகுதிகளில் மருத்துவ கண்காணிப்பு தீவிரப் படுத்தும் படியும் சுகாதாரத் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.