கர்நாடகாவில் உள்ள மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் காய்ச்சலால் நேற்று 5 வயது குழந்தை ஒன்று இறந்துள்ளது.

இவர் தார்வார் மாவட்டத்தைச் சேர்ந்த கரியப்பாவின் மகள் பூர்ணிமா ஆகும். இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். எனவே இவரின் பெற்றோர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இவருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இதனை அறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.