
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த கும்பமேளா மொத்தம் 45 நாட்கள் நடைபெறும் நிலையில் இது 114 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதால் மகா கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது. இந்த கும்பமேளா விரைவில் நிறைவடையும் நிலையில் இதுவரையில் கோடிக்கணக்கான பக்தர்கள் நீராடியுள்ளனர். தொடர்ந்து கும்ப மேளாவுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் உத்திரபிரதேச மாநிலத்தின் ஜவுன்பூர் பகுதியில ஒரு பேருந்தில் பக்தர்கள் கும்பமேளாவுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஒரு வேன் மீது எதிர்பாராத விதமாக பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் 40 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.