
ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது பர்ஹைட்டில் பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு லோகோ பைலட்டுக்களும் உடல் கருகி பலியாகினர். இந்த விபத்தில் 5 பேர் பலத்த காயமடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sahibganj, Jharkhand: A major collision on the Farakka-MGR railway line in Sahibganj killed two drivers and injured 4-5 railway staff. Firefighters and officials are managing the situation, with investigations ongoing pic.twitter.com/7Dhi0gZ9CK
— IANS (@ians_india) April 1, 2025
இந்த விபத்து இன்று அதிகாலை 3:30 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் மீட்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்தியாவில் சமீப காலமாக ரயில் விபத்துகள் என்பது அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.