புதுச்சத்திரம் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஒரு பேருந்தில் சென்னையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றனர். இவர்கள் ஒரு தனியார் பேருந்தில் சென்ற நிலையில் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார். இவர்கள் வந்த பேருந்து இன்று அதிகாலை 4 மணியளவில் லக்கியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வளைவில் சென்றது.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் உள்ள ஒரு 10 அடி பள்ளத்தில் தலைக்குப்பிற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரையும் மீட்டு ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்