
மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர்கள் கைலாஷ் – ஜமுனாதேவி தம்பதி. இந்த தம்பதியின் 13 வயது மகன் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர்களது வீட்டின் முன்பு அதிக சத்தத்துடன் டிஜே இசை போடப்பட்டுள்ளது.
இதைக் கேட்டதும் மகிழ்ச்சியடைந்த 13 வயது சிறுவன் வீட்டில் இருந்து வெளியில் வந்து இசைக்கேற்றபடி அந்த கும்பலுடன் சேர்ந்து நடனம் ஆட தொடங்கினார்.
ஆனால் ஒரு கட்டத்தில் சிறுவன் சுயநினைவு இழந்து மயங்கி விழுந்தார்.
சத்தத்தை குறைக்குமாறும் தனது மகனுக்கு உதவுமாறும் ஜமுனாதேவி அழுது உதவி கேட்டார். ஆனால் அந்த சத்தத்தில் யாரும் அவரது அழுகையை பொருட்படுத்தவில்லை. பின்னர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இதய செயலிழப்பினால் சிறுவன் உயிர் இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.