2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது தெற்கு மாகாணமான ஜார்ஜியாவில் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்த குற்றத்திற்காக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு அட்லாண்ட் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சில நிமிடங்களிலேயே 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொடுத்ததன் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். தனது கைது சம்பவம் பற்றி டிரம்ப் கூறுகையில், இது அமெரிக்காவில் மற்றுமொரு சோகமான நாள் என்றும் வழக்கு தொடர்ந்திருப்பது அரசியல் உள்நோக்கம் உடையது என்றும் குறிப்பிட்டுள்ளார்.