உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் தொடர்பாக அதிபர் புதினை அந்த நாட்டைச் சேர்ந்த பிரபலமான செஃப் ஒருவர் விமர்சித்துள்ளார். அவருடைய பெயர் அலெக்ஸ்லி ஜமீன். இவர் தற்போது செர்பியா பகுதியில் உள்ள ஹோட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு அதிபர் புதின் கீரிமிய தலைவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனை அலெக்ஸ்லி விமர்சனம் செய்த நிலையில் பின்னர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். இவர் லண்டனில் குடியேறிய நிலையில் அங்கு இருந்து கொண்டே ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதன் மூலம் அவர் மிகவும் பிரபலமானார். இவர் போர் தொடங்கிய பிறகு அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் இவருடைய சமையல் நிகழ்ச்சி ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இவர் செர்பியாவிற்கு தான் எழுதிய ஒரு புத்தகத்தை விளம்பரப்படுத்துவதற்காக சென்றுள்ளார். அங்கு ஒரு ஹோட்டலில் அவர் தங்கி இருந்த நிலையில் தற்போது மர்மமான முறையில் இறந்துள்ளார். மேலும் அவருடைய சடலத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.