தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் திமுக 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற தற்போதே அதற்கான வேலைகளை திமுக தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கோவை கொடிசியா மைதானத்தில் திமுகவின் முப்பெரும் விழா நேற்று மாலை நடைபெற்றது.

இதில் முதல்வர் ஸ்டாலின், 40 தொகுதி எம்பிக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது அதிமுகவிடம் இருக்கும் தொகுதிகளையும் சேர்த்தே திமுக பறிப்பது உறுதி என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சுமார் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.