
சென்னையில் திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதாவது அதிமுகவினர் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்கனவே பல இடங்களில் டெபாசிட் இழந்ததால் தற்போதும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் டெபாசிட் இருந்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் ஆகிவிடும் என்பதாலும் பாஜகவுடன் மறைமுக உறவு வைக்க விரும்புவதாலும் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறியதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியவாதவது, தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுகவினர் கூறியதால் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவினர் ஓட்டு போடக்கூடாது. இதை அவரால் கூற முடியுமா?நான் உங்கள் மூலமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு சவால் விடுகிறேன். நாங்களும் ஒரு கணக்கு எடுக்கிறோம். அதாவது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவில் யார் யார் ஓட்டு போட்டார்கள் என்பது குறித்து கணக்கெடுப்போம். அவர்கள் அனைவரும் ஓட்டு போட்டால் கண்டிப்பாக அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணித்து விட்டதாக அர்த்தம். எடப்பாடி பழனிச்சாமி ஓட்டு போடாதீர்கள் என்று கூறிய பிறகும் கட்சியினர் ஓட்டு போட்டால் அவர்களை கட்சியிலிருந்து நீக்குவேன் என்று கண்டிப்பாக அவர் கூற மாட்டார் என்று கூறினார்.