கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்டு வரும் நிலையில் தற்போது திமுக அங்கு மீண்டும் வெற்றி பெற தொடங்கியுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு திமுகவை சேர்ந்த மணிமாறன் கோயம்புத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அதன் பிறகு 1999, 2004, 2009, 2019 ஆகிய தேர்தல்களில் திமுகவின் கூட்டணி கட்சிகள் கோவையில் போட்டியிட்டன. இந்த நிலையில் சுமார் 28 வருடங்களுக்கு பிறகு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கோவையில் மகத்தான வெற்றியை திமுக பதிவு செய்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியில் உள்ளார்.