அதிமுகவில் ஓபிஎஸ் இணைவதாக வரும் தகவலில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். ஓபிஎஸ்-ன் நடவடிக்கைகளால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி பெற்றது அதிமுகவின்வெற்றி ஓபிஎஸ்-ன் வெற்றி அல்ல.

இரட்டை இலைக்கு எதிராக போட்டியிட்ட ஓபிஎஸ்ஐ எந்த வகையில் ஏற்க முடியும் என கேள்வி எழுப்பிய அவர், பதவி பறிப்போகிறது என்பதால் கட்சி பிரிவுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது ஓபிஎஸ் தான். அவரை அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.