
எடப்பாடி பழனிச்சாமி 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு வெற்றிக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அதிமுகவில் தற்போது சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைத்தல், கட்சியின் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த மாவட்ட பொறுப்பாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை எடப்பாடி பழனிசாமி எடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது அதிமுகவில் அமைப்பு ரீதியாக அமைந்துள்ள 82 மாவட்டங்களுக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இடம்பெறாதது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் அவருக்கு வேறு ஏதேனும் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அதாவது எடப்பாடி பழனிச்சாமிக்கு சமீபத்தில் நடந்த ஒரு பாராட்டு விழாவில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாத நிலையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களை நிராகரித்ததால் தான் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார். அதன் பிறகு எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவின்போது எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை செங்கோட்டையன் கூறாததோடு சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். செங்கோட்டையனை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக ஆர்பி உதயகுமார் கூட ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். மேலும் இதன் காரணமாக அதிமுகவில் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே விரிசல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.