இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு அளித்துள்ளார். தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளிக்க சூரியமூர்த்திக்கு உரிமை இல்லை. உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு வரையறுக்கப்பட்ட அதிகாரமே உள்ளது.

சூரியமூர்த்தி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை, எடப்பாடி சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்டார். சூரியமூர்த்தியின் மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலனைக்கு எடுத்து கொண்டிருக்கக் கூடாது. சூரியமூர்த்தியின் கோரிக்கை மனுவை நிராகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி பதில் மனு அளித்துள்ளார்.