
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை விஜய் தொடங்கிய நிலையில் அவருடன் இருப்பவர்கள் ரசிகர்கள் தானே தவிர தொண்டர்கள் கிடையாது. எனவே மக்களுக்காக நீண்ட நெடிய தூரம் விஜய் பயணம் செய்தால் தான் அவரை அரசியல் தலைவராக ஏற்க முடியும். அவர் அரசியல் தலைவர் என்று அங்கீகாரத்தை பெற கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்.
அதன் பிறகு மக்களையும் அரசியல் கட்சிகளையும் திசை திருப்பும் நோக்கத்தில் தான் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிகளுக்கு பங்கு உண்டு என்றும் விஜய் கூறியுள்ளார். அதிமுக தற்போது 53வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை நம்பி 2 கோடி தொண்டர்கள் அதிமுகவில் இருக்கிறார்கள். தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக விரைவில் ஆளும் கட்சியாக மாறும். மேலும் புதிய புதிய கட்சிகள் வர உள்ளதால் 2026 தேர்தல் மிகப்பெரிய பலப் பரீட்சையாக இருக்கும் என்றார்.