
தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தின் போது நடிகர் விஜய் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் இடையே மட்டும் தான் அடுத்து வரும் தேர்தலில் போட்டி என்று கூறிய நிலையில் இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அந்த கட்சி சார்பில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியின் போது இது பற்றி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் இடையே மட்டும் தான் போட்டி என்று விஜய் கூறியுள்ளார்.
இதை பார்த்தால் போட்டி இரண்டாம் இடத்திற்கு தான் என்று தெரிகிறது. அப்படி எனில் அதிமுகவுடன் தான் இரண்டாம் இடத்திற்கு விஜய் போட்டி போடுகிறார். விஜய் அதிமுகவை விட நான்தான் சக்தி வாய்ந்தவன் என்று அவர்களுக்கு சவால் விடுகிறார். அவர் பேசியதை வைத்து பார்க்கும் போது எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. ஏதோ கருத்துக்கணிப்பு நடத்தியதில் அவர் இரண்டாம் இடத்திற்கு வந்துவிட்டதாகவும் ஆட்சியைப் பிடிக்கப் போவதாகவும் கூறுகிறார்கள். இப்படி பேசி பேசிய விஜயை உசுப்பேத்திக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு ஆசையை தூண்டி விட்டு களத்திற்கு வாங்க என்று உசுப்பேத்திகிறார்கள். விசிக திமுக கூட்டணியில் இருக்கிறது என்று கூறுகிறார்கள். மேலும் அது உண்மையாக இருந்தாலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது என்றார்.