
அதிமுகவில் பன்னீர் செல்வத்திற்கு மீண்டும் இடம் கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்ஐ எப்படி மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியும்.
அதிமுகவிற்கு எப்போதுமே விசுவாசம் இல்லாத நபர் ஓபிஎஸ் மத்திய அமைச்சராகலாம் என்ற சுயநலத்தில் பாஜகவில் இணைந்து போட்டியிட்டார். அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமை தான் என்று இபிஎஸ் காட்டமாக பேசியுள்ளார்.