
அதிமுக கட்சியின் விவசாய அணி துணைத் தலைவர் எம். சுப்பையன். இவர் உடல்நல குறைவின் காரணமாக காலமானார். இவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து உடன் இருந்தவர். அதன் பிறகு ஜெயலலிதாவின் நம்பிக்கையையும் பெற்று கட்சியின் முக்கிய புள்ளியாக திகழ்ந்தார்.
இவர் அதிமுக கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார். அதன் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த போது அவர் இபிஎஸ் பக்கம் இருந்தார். இந்நிலையில் அவர் தற்போது உடல்நலக் குறைவின் காரணமாக காலமானார். அவருடைய மறைவுக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் தெரிவித்து வருகிறார்கள்.