
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, நீட் ரத்து தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் தான் நீட் தமிழகத்திற்குள் நுழைந்தது
மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், நிச்சயம் நீட் விலக்கு கிடைத்திருக்கும். நீட் விலக்கு அளித்தால் தான் பாஜக உடன் கூட்டணி என அறிவிக்க முடியுமா? என எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக அதிமுக அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அதிமுக யாருடன் கூட்டணி செல்ல வேண்டும்? என்ன கோரிக்கை வைக்க வேண்டும் என்பதில் என்ன அக்கறை? கர்நாடகா அரசு காவிரியில் உரிமைகளை வழங்கினால்தான் காங்கிரசுடன் கூட்டணி என அறிவிக்க தயாரா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.