தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வியூகம் வகுத்து வரும் நிலையில் பாஜகவுடன் கூட்டணி குறித்து ஆறு மாதங்களுக்கு பிறகு பதில் சொல்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று சந்தித்தது கூட்டணி உறுதி என்பது போல் கூறப்படுகிறது.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி தொடர்பாக தேர்தல் சமயத்தில் கூறுகிறேன் என்று மழுப்பலாக கூறிவிட்டார். இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது பாஜகவுடன் கூட்டணி தொடர்பான கேள்விக்கு தன்னுடைய அதிருந்தியை வெளிப்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,  ராயபுரத்தில் நான் 25 வருடங்களாக முடி சூடா மன்னனாக திகழ்ந்தேன். நான் தோல்வியை சந்தித்ததற்கு பாஜக மட்டும் தான் காரணம்.

நான் முதல் முறையாக வெளிப்படையாகவே கூறுகிறேன் கடந்த தேர்தலில் அதிமுக தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி தான் காரணம். நான் 25 வருடமாக ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது  பாஜகவால் தோல்வியடைந்து சட்டசபைக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். ஏனெனில் ராயபுரம் தொகுதியில் 40 ஆயிரம் சிறுபான்மையினர் மக்கள் இருக்கும் நிலையில் அவர்கள் பாஜக மீது கோபத்தில் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு என் மீது எந்த கோபமும் கிடையாது. ஏனெனில் அவர்கள் அப்போதே என்னிடம் சொன்னார்கள் பாஜகவை கழட்டி விட்டு வாருங்கள் என்று. ஆனால் நான்தான் அது வேஸ்ட் லக்கேஜ் வேற வழி இல்லை. சமயம் வரும்போது நாங்கள் கழட்டி விட்டு விடுவோம் என்று அவர்களிடம் கூறினே ன்.அதே மாதிரி தற்போது நேரம் வந்ததால் அந்தவேஸ்ட் லக்கேஜ் தேவையில்லை என்று கூறி நாங்கள் கழட்டி விட்டு விட்டோம்.

அது ஒரு ஓடாத பெட்டி பழைய மோட்டார் சைக்கிள் கண்டிப்பாக அந்த பழைய மோட்டார் சைக்கிள் ஓடவே ஓடாது. பாஜக மட்டும் இல்லை எனில் நான் 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் கண்டிப்பாக ஜெயித்திருப்பேன். பாஜகவால் நான் தற்போது ஜீரோவில் இருந்து ஓடும் நிலையில் திமுக 40-லிருந்து ஓடுகிறது. மேலும் கடந்த 2019 மற்றும் கடந்த 2021 ஆகிய தேர்தல்களில் அதிமுக தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்தது மட்டும்தான் காரணம் என்று  கூறினார்.