
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த கோபிநாத் என்ற 28 வயது இளைஞர் அதிமுக இளைஞரணி செயலாளராக உள்ளார். அதே ஊரை சேர்ந்த திமுக ஒன்றாவது வார்டு செயலாளர் தியாகு ஆகிய இருவரும் நண்பர்கள். தியாகுவின் மனைவி ஒரு மாற்றுத்திறனாளி. இந்த நிலையில் கணவன் மனைவியிடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்ததால் இதில் கோபிநாத் தலையிட்டு பஞ்சாயத்து பேசியுள்ளார்.
அதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதால் கடந்த 20ம் தேதி தியாகுவின் பாட்டி தனலட்சுமி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய இறுதி சடங்கில் பங்கேற்க கோபிநாத் மற்றும் தியாகுவிற்கு இடையே தவறாக ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த தியாகு கோபிநாத்தை கட்டையால் கடுமையாக தாக்கினார். இதனால் படுகாயமடைந்த கோபிநாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தியாகுவை கைது செய்துள்ளனர்.