
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்றுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று பார்வையிட்டார்.
சற்று முன் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். இதனால் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்குமா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.