
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நீட் தேர்வை கொண்டு வந்ததற்கு பிராயசித்தமாக தான் மத்திய அரசு இந்த 11 மருத்துவ கல்லூரிகளை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்துள்ளது எனவும் கணபதி ஐயரின் பேக்கரி டீலிங் போல 11 மருத்துவக் கல்லூரிகளை நாங்கள் வைத்துக் கொள்கிறோம். நீங்க நீட் தேர்வை வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
அப்போது எழுந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வை காங்கிரஸ் மற்றும் திமுக தான் கொண்டு வந்தது. அதனை அதிமுக தடுக்க முயற்சி செய்தது என்றார். அப்போது பேசிய அமைச்சர் சிவசங்கர் உங்களுடைய ஆட்சியில் தான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றார். அதோடு கலைஞர் கருணாநிதி இருக்கும்போதும் அம்மையார் ஜெயலலிதா இருக்கும்போது நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் வரவில்லை என்றும் கூறினார்.
அதன்பின் பேசிய செல்வப் பெருந்தகை காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சியில் நீட் தேர்வு வரவில்லை என்றும் யார் ஆட்சியில் நீட் தேர்வு வந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் கூறினார்.
இதை தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வு சிக்கலை சரி செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது எனவும் நீட் தேர்வை ரத்து செய்தால் தான் கூட்டணி வைப்போம் என்றும் கூறுங்கள் என்றார். பின்னர் பேசிய எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தது நீங்கள் தான் என்றார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் நாங்கள் சொன்னது உண்மைதான் எங்கள் கூட்டணி அமைந்திருந்தால் கண்டிப்பாக நீட் தேர்வை நாங்கள் ரத்து செய்திருப்போம் என்றார்.
2 மாதங்களுக்கு முன்பு வரையில் 2031 வரையில் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறிவிட்டு தற்போது கூட்டணி வைத்துள்ளீர்கள். ஆனால் இப்போது கூட்டணி வைத்துள்ளீர்கள். மேலும் யாரை ஏமாற்றுவதற்காக இந்த நாடகம் என்று கேட்டார். இதோடு இந்த விவாதம் முடிவுக்கு வந்தது.