
தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் சமீபத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டதாகவும் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் கூறினார். அதன்பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இடம் பெறுவார்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகளில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று கூறிவிட்டார்.
அதன் பிறகு அவர்கள் இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பார்களா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பன்னீர் செல்வத்திடம் அடுத்த வரும் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெறுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் இன்று விடுமுறை என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். மேலும் ஓபிஎஸ் தனி கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் விஜயுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் ஒரு செய்தி ஒன்று பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.