சேலத்தில் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கு திமுக நிர்வாகி சதீஷை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சதீஷ் என்பவரை சண்முகம் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் கொலை செய்ததாக தகவல் வெளியாகி  உள்ளது. நேற்று சண்முகம் அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்த பொழுது வாகனத்தில் தன்னுடைய வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

அப்பொழுது இரண்டு பைக்குகளில் கும்பலாக வந்த மர்ம நபர்கள் வழிமறித்து  அவரை அறிவாளால்  சராமாறியாக வெட்டியதில் அவருடைய தலை பகுதி சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.