முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தான் கட்சி பொது செயலாளர் என்று அறிவிக்கப்பட்டார். அதன்பின் சசிகலா மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவர்களை கட்சியிலிருந்து நீக்கினர். இதே போன்று அதிமுக கட்சியில் இருந்து டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் நீக்கப்பட்ட நிலையில் அவர் தனியாக கட்சி தொடங்கினார். அதே சமயத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவரும் மீண்டும் அதிமுகவை ஒன்று சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுகவில் மீண்டும் இணைவு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று தெரிவித்துவிட்டார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலாவிடம் அதிமுக மீண்டும் ஒன்று இணைந்தால் யார் முதல்வர் வேட்பாளர் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சசிகலா கூறியதாவது, இந்த கேள்விக்கு இப்போது பதில் அளிப்பது சிறப்பான முறையில் இருக்காது. அதற்கான கால அவகாசம் நிறைய இருக்கிறது. மேலும் அதிமுக மீண்டும் ஒன்று சேர்ந்தால் மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவரே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறினார்.