கோவை முன்னாள் மேயரும், முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்த அவர், ஜெ.,வின் அன்பை பெற்றவர். கட்சியில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.