திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அதிமுகவின் 53வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் பங்கேற்க ஏராளமான கூட்டம் வந்திருந்தது. ஆனால் பொதுக்கூட்டத்தின் முடிவில் தான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பொது கூட்டத்தில் பங்கேற்க வந்த அனைவரும் விழா முடிந்ததும் ஆளுக்கொரு நாற்காலியாக எடுத்துச் செல்ல துவங்கினர்.

அப்போதுதான் உண்மை தெரிய வந்தது கூட்டத்தில் பங்கேற்றால் இலவச நாற்காலி என்று கூறியதால் தான் அவ்வளவு கூட்டம் வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளி தற்போது வைரல் ஆகி வருகிறது.