நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார். இவர் மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற நிலையில் இந்தியாவின் எந்த மைதானத்தில் சென்று விளையாடினாலும் அவருக்கு எதிராக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது.

எம்.எஸ் தோனிக்கு பிறகு இந்தியாவின் சிறந்த ஃபினிஷர் என்று பாராட்டப்பட்ட ஹர்திக் பாண்டியாவால் காயத்திற்கு பிறகு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கடைசி நேரத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பினிஷிங் செய்யும் திறமை ஹர்த்திக் பாண்டியாவிடம் குறைந்து வருகிறது என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஹர்திக் பாண்டியாவின் அடிக்கும் திறமை கீழே சென்று கொண்டிருக்கிறது. இது ஒரு கவலைக்குரிய விஷயமாகும். அவர் வான்கடே மைதானத்தில் மிகவும் வித்தியாசமாக செயல்படுகிறார் என்று கூறியுள்ளார்.